25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் முகக்கவசத்தை அணியுமாறு இந்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா பரவலை தடுப்பதற்கு பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரோனின் பிஎப்.7 துணை வைரஸ்கள் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என கூறப்படுகிறது. 

அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ள இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, பிரித்தானியா, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவியு்ள்ளது. 

பிஎப்.7 வைரஸ், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதமளவில் இருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. 

ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், இன்று பாராளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா கூறியதாவது,

கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.

புதிய வகை கொரோனா பரவலை தீவ்ரமாக கண்காணித்து வருகிறோம். புதிய கொரோனா வகையை கண்டறிய சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருகிறது.சீனா கொரோனா பரவல் நிலவரத்தை இந்தியா கவனித்து வருகிறது. என தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles