கொல்கத்தா – ராஜஸ்தான் போட்டி மழையால் கைவிடப்பட்டது

0
92

குவாஹாட்டி, பர்சாபரா கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவிருந்த 17ஆவது இண்டியன் பிறிமியர் லீக் அத்தியாயத்திற்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கும் இடையிலான கடைசி லீக் போட்டி மழையினால் கைவிடப்பட்டது.

இதன் காரணமாக இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதற்கு அமைய அணிகள் நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. பஞ்சாப் கிங்ஸை வெற்றிகொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 17 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திற்கு முன்னேறியது.