கொள்ளுப்பிட்டி விபத்து: கார் சாரதிக்கு நிபந்தனைகளுடன் பிணை

0
122

கொள்ளுப்பிட்டி விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கார் சாரதி கடுமையான பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டார். ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 09 மணி முதல் மதியம் 12 மணி வரையான காலப்பகுதியில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும், விபத்தில் உயிரிழந்த முச்சக்கர வண்டிச் சாரதியின் மூன்று பிள்ளைகளுக்கும் கருணைக் கொடுப்பணவாக தலா 5 இலட்சம் வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகளோடு, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டது.