கொழும்பின் புற நகர் பகுதியான வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் நபர் ஒருவர் மர்ம கும்பல் ஒன்றினால் கூரிய ஆயுதங்களில் சரமாரியாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொடூர சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளதாக வத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, கொலை செய்யப்பட்ட நபர் அந்த விடுதியில் முகாமையாளராக கடமையாற்றி வந்துள்ளதாக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, பாதுகாப்புக் கமராக்களின் மூலம் முச்சக்கர வண்டியொன்றினால் தனியார் விடுதிக்கு வந்த 5 பேர் கொண்ட ஒரு குழுவினரால் இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், சம்பவத்தில் உயிரிழந்த நபர் 58 வயதுடைய மாத்தறை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட சேனபர எட்டியாரச்சி என்பவர் ஆவார்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை மற்றும் களனி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.