Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
இராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்களை கண்டுபிடித்துள்ளனர்.
அண்மையில் மாகொல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குழுவொன்றிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாகொல பிரதேசத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் அண்மையில் 7 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இராணுவம் மற்றும் விமானப்படையிலிருந்து தப்பிச் சென்ற இருவர் அடங்கியிருந்ததுடன், சந்தேகநபர்கள் 7 பேரையும் விசாரணைக்கு உட்படுத்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்தனர்.
இதன்படி, சந்தேகநபர்களிடம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இராஜகிரிய பகுதியில் உள்ள வீடொன்று நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது வீட்டில் இருந்து T56 துப்பாக்கி, T56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 300, 9 mm ரக 50 தோட்டாக்கள் மற்றும் மைக்ரோ பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த வீடு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படுவதுடன், கடந்த காலங்களில் கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களுக்கு இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.