கொழும்பில் பல அடுக்குப் பாதுகாப்பு: போராட்டம் தீவிரம்!

0
168

ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதியமைச்சை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்றகூடிய போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்தின்
நுழைவாயில்களை இடைமறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்ட 19பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.