கொழும்பில் மாணவி உயிர்மாய்ப்பு ; மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையடுத்து கல்வி அமைச்சு எடுத்த நடவடிக்கை!

0
22

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவி ஒருவர் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட  சம்பவத்தையடுத்து மன விரக்தி அடைந்த நிலையில்  உயிரை மாய்த்துக்கொண்டார்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிராக ஒன்று திரண்ட பொதுமக்கள் உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி குறித்த பாடசாலையை முற்றுகையிட்டு இன்று (8) ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மேல் மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர், குறித்து சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்தார்.

அதன்படி கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை அதிபரிடம் விளக்கம் கோரப்படும் என்றும், சந்தேக நபரான ஆசிரியர் உடனடியாக  பணி இடமாற்றம் செய்யப்படுவார் என்றும், மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை அறிக்கை கிடைத்தபின் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.