கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

0
2

கொழும்பில் கொம்பனிவீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மோகன்வீதி பிரதேசத்தில் சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கொம்பனிவீதி பொலிஸாரால் நேற்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொம்பனிவீதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொம்பனிவீதி , மோகன்வீதி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்  40 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்,  அதே பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு 12 மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 47 மற்றும் 56 வயதுடையவர்கள் ஆவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனிவீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.