கொழும்பு – கண்டி போக்குவரத்து பாதிப்பு!

0
104

கொழும்பு – கண்டி நெடுஞ்சாலையில் தங்கோவிட்ட ஹலகலைக்கு அருகில் அரிசி ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி ஒன்று இன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உதவியாளர் காயமடைந்த நிலையில், அந்த வீதியின் போக்குவரத்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக தடைப்பட்டது.
மிதிரிகிரியில் இருந்து களுத்துறைக்கு அரிசி ஏற்றிச் சென்றபோது சாரதி தூங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பொலிஸாரின் தலையீட்டில் கையிருப்பு அரிசியை வேறு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விபத்தில் காயமடைந்த உதவியாளர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்கொவிட்ட பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
தங்கோவிட்ட பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி, போக்குவரத்து பிரிவு நிலைய கட்டளைத் தளபதி மற்றும் ஏனைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.