கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை மீள ஆரம்பம்

0
123

கொழும்பு – கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அநுராதபுரத்திலிருந்து வவுனியா -ஓமந்தை வரையிலான வடக்கு புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில், வடக்கு புகையிரதப் பாதையில் எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி முதல் வழமைபோன்று புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.