25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொழும்பு துறைமுக நகரில் சுங்க வரியில்லா வணிகம்: ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சுங்க வரியில்லா வணிக வளாக வர்த்தகத்தை நடத்துவதற்கு, ஒரு முதலீட்டாடளர் குறைந்தபட்சம் 7 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவேண்டும்.

இதேவேளை ஒரு முதலீட்டாளர் ஒரு சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகத்தை நடத்த குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும்.

குறித்த முதலீட்டாளருக்கு சுங்க வரியில்லா வர்த்தக நடவடிக்கைகளில் உலகளாவிய அனுபவமும் இருக்கவேண்டும் என்று குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles