நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உணவுத்தட்டுப்பாட்டு தீர்வாக கொழும்பு மாநகர சபை அமைந்துள்ள பகுதியில் விவசாயச் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபை ஆணையாளர் ரோசி சேனாநாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாக விவசாயச் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாநகரசபையின் ஊழியர்கள் சிலர் விவசாயச் செய்கைக்காக காணியை சுத்திகரிக்கும் பணியில் இன்று காலை ஈடுபட்டனர்.