கொழும்பு முல்லேரியா பிரதேசத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு

0
123

கொழும்பு முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், வெளிநாட்டு துப்பாக்கி ஒன்று மற்றும் அந்தத் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே துப்பாக்கியும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில், முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.