கொஸ்மோதர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஸ்மோதர கோட்டபொல பிரதேசத்தில், நேற்று முதல் காணாமல் போயிருந்த சிறுவன் இன்று காலை குளமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த சிறுவனை நேற்று முதல் காணவில்லை என்றும் இவ்வாறான நிலையிலேயே சிறுவனின் சடலம் குளமொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், கொஸ்மோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.