முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம், எந்த சலுகையும், விருந்தோம்பலும் அளிக்கவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூர் வருகை குறித்து சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாமின் கேள்விக்கு பாலகிருஷ்ணன் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை வழங்கியுள்ளார். பொதுவாக, சிங்கப்பூர் அரசாங்கம் முன்னாள் அரச தலைவர்கள் அல்லது தலைவர்களுக்கு சலுகைகள், மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை வழங்குவதில்லை. இதன் அடிப்படையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் எந்தவித சலுகைகளோ, விருந்தோம்பலோ வழங்கப்படவில்லை என பாலகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ச, தனிப்பட்ட பயணமாக ஜூலை 14 அன்று சிங்கப்பூர் வந்தடைந்தார் என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் முன்னர் கூறியது. தனது குறுகிய கால வருகை விசாவை நீடித்த நிலையில் அவர் ஓகஸ்ட் 11 வரை சிங்கப்பூரில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home முக்கிய செய்திகள் கோட்டாபயக்கு சிங்கப்பூர் அரசாங்கம் சலுகைகள் வழங்கவில்லை: விவியன் பாலகிருஷ்ணன்