கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்!

0
160

உள்ளூர் சந்தையில் கோதுமை மாவின் விலை தொடர்பில் இன்று இறுதி தீர்மானிக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புதிய விலைகள் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறுகிறார்.
இன்று பேக்கரி உரிமையாளர்களை சந்தித்து பாணின் விலை குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நுகர்வோருக்கு விற்கப்படும் கோதுமை மாவின் விலை தொடர்பில் கோதுமை மா உற்பத்தியாளர்களிடமிருந்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு (CAA) அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.