கோப் – கோபா உறுப்பினர்கள் நாளை மறுதினம் நியமனம்

0
141

பொது விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு அல்லது கோப் குழு மற்றும் பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழு அல்லது கோபா குழுவுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் நாளை மறுதினம் அறிவிக்கப்படவுள்ளன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
பல்வேறு நெருக்கடிகள் காரணமாக கோப் மற்றும் கோபா குழுக்களுக்கான நியமனங்கள் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தாமதமாகின.
இதனிடையே, கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பல தடவைகள் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த இரண்டு குழுக்களின் தலைவர் பதவிகளும் எதிர்க்கட்சிக்கு வழங்கப்படாவிட்டால், மற்ற குழுக்களில் பங்கேற்பது குறித்து இருமுறை சிந்திக்க வேண்டி ஏற்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு முடிவடைந்தவுடன், கோப் மற்றும் கோபா உட்பட பல பாராளுமன்றக் குழுக்கள் ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.