கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் இவ் ஆண்டிற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சுற்றாடல் துறை அமைச்சரும் ஒருங்கினைப்பு குழுத் தலைவருமான நஸீர் அஹமட் தலைமையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. காணி, மீன்பிடி, நீர் வளங்கள், சுகாதாரம், உட்பட பல்வேறு வேலை திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இதேவேளை வாகரை பிரதேச சபையின் பிரதிநிதிகள் தொடர்ந்து பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சமூகம் தராமல் உள்ளதால் பிரதேச மக்களின் சபையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு தீர்வு பெறமுடியாத நிலமை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த சபையின் செயலாளருக்கு ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளரை ஒருங்கினைப்பு குழுத்தலைவர் கேட்டுக்கொண்டார். குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள்,மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.