கோழிப் பண்ணைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க அரசாங்கம் முயற்சி

0
134

இலங்கையில் உள்ள கோழிப்பண்ணைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க அரசாங்கம் முயற்சிப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் அரசாங்கம் ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்களைப் பாதுகாக்கும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கோழி வளர்ப்புப் பண்ணையுடன் கரந்தகொல்ல கோழிப் பண்ணையையும் விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக கோழிப் பண்ணையாளர்களைப் பாதுகாக்கும் கூட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ கருணாசாகர குற்றஞ்சாட்டினார்.

அரசாங்கம் திட்டமிட்டபடி வெளிநாட்டு நிறுவனத்திற்கு கோழி வளர்ப்பு பண்ணையை வழங்குவதால் இறுதியில் சந்தை ஏகபோகத்தையும் அவர்களிடம் ஒப்படைக்கும் கட்டம் வருமென அவர் கூறினார்.