க்ளென் மெக்ஸ்வெல்லிற்கு அபராதம்!

0
7

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காகப் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் க்ளென் மெக்ஸ்வெல்லிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சண்டிகரின் முல்லன்பூரில் நடந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போதுஇ நடத்தை விதிகளை மீறியதற்காக அவர் மீது போட்டி மத்தியஸ்தரால் குற்றம் சுமத்தப்பட்டது.

இதன்படி, போட்டி விதிமுறை பிரிவு 2.2 இல் குறிப்பிட்டுள்ள போட்டியின் போது கருவிகள் மற்றும் பொருட்களுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து அவருக்குப் போட்டிக் கட்டணத்தில் 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டதுடன்இ ஒரு குறைப்பாட்டு புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது.