2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.டிஓஈஎன்ஈரிஎஸ்.எல்கே என்ற பரிட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்துபரீட்சைப் பெறுபெறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்கள் அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.பரீட்சையில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 976 பரிட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.அதில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 445 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65 ஆயிரத்து 531 தனியார் பரிட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.