30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சங்கிலிப் போராட்டம் ஆரம்பம்!

மலையக மக்களின் இருப்பை பாதுகாக்கவும், தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சங்கிலிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளேன். அனைத்து தோட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்வேன். வண்ணங்களோ, சின்னங்களோ இதில் இல்லை. எனவே, எண்ணங்களுக்காக அனைவரும் பேராதரவு வழங்க வேண்டும் என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினர், தோட்டப்பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு, நாட்டு நிலவரம் பற்றியும், தொழில்சார் விடயங்கள் குறித்தும் தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஓர் அங்கமாக நுவரெலியா – நானுஓயா தோட்டப்பகுதிகளில் இன்று தெளிவூட்டல் நடவடிக்கை இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே வடிவேல் சுரேஷ் இவ்வாறு கூறினார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles