தமிழில் மந்திரமோதி யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலிய மன்னனின் 405 ஆம் ஆண்டு நினைவுதினம் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.குறித்த அஞ்சலி நிகழ்வானது வவுனியா கற்குளம் மகாவிஷ்ணு ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது தமிழிலே மோட்ச அர்ச்சனை செய்யப்பட்டு கிரியைகள் இடம்பெற்றதோடு, சங்கிலிய மன்னனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.அஞ்சலி நிகழ்வில் சிவசேனை அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தமிழ்திரு அ.மாதவன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
