சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி

0
120

உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நவம்பர் 19 ஆம் திகதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும்.

நடப்பு உலகக் கிண்ண தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றிநடையை தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து இருக்கிறது.

இந்நிலையில் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் ஒரு சீசனில் அதிக ஓட்டங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். சச்சின் 673 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதனை கோலி முறியடித்து விளையாடி வருகிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்களில் ரிக்கி பாண்டிங்கை முந்தினார் விராட் கோலி. அந்த பட்டியலில் விராட் கோலி 3 -வது இடத்தை பிடித்துள்ளார்.

ஒரு உலகக்கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் அடித்தவர் என்ற சச்சின் தெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் சச்சின் தெண்டுல்கர் 673 ஓட்டங்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

இந்த நிலையில் நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 673 ஓட்டங்களை கடந்துள்ளார். இதன் மூலம் விராட் கோலி (674*) ஒரு உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் அடித்தவர் என்ற சச்சின் (673) சாதனையை முறியடித்தார்.

மேலும் விராட் கோலி ஒரு உலகக் கிண்ணத் தொடரில் அதிகமுறை 50+ ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 7 முறை 50+ ஓட்டங்கள் அடித்த சச்சின் (2003), ஷகிப் அல் ஹசன் (2019) ஆகியோரின் சாதனையை முறியடித்து நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் 8-வது முறையாக 50+ ஓட்டங்களைக் கடந்து விராட் கோலி இந்த சாதனையை படைத்துள்ளார்.

18426 – சச்சின்

14234 – குமார் சங்ககார

13705* – விராட் கோலி

13704 – ரிக்கி பாண்டிங்

13430 – சனத் ஜெயசூர்ய