எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு பிரவேசித்த சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தனது ஆதரவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்க தீர்மானித்துள்ளார்.
இன்று காலை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.