சட்டமா அதிபர் திணைக்களத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெயர் பலகையில் அரச மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி உள்ளடக்கப்படாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருகிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த பெயர் பலகையில் தமிழுக்கு பதிலாக மன்டரின் மொழி இடம்பெற்றிருந்தது.
புதிய பெயர் பலகை ஒன்றை எதிர்காலத்தில் வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.