சட்டவிரோதமாகப் பாதுகாப்புப் படைகளை விட்டு வெளியேறி குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை!

0
4

ஆயுதப் பயிற்சி பெற்றதன் பின்னர் சட்டவிரோதமாகப் பாதுகாப்புப் படைகளை விட்டு வெளியேறிஇ திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்பினை பேணிவருவோரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுநிலை எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார். இவ்வாறான நபர்கள் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களுடன் தொடர்புகொள்ளும் போக்கு அதிகரிப்பதை அவதானிக்க முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் பயிற்சி பெற்று இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை மிகக் குறுகிய காலத்தில் கைது செய்யும் திறன் இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் உள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுநிலை எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.