சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வு : 6 பேர் கைது!

0
107

பொகவந்தலாவ – மஹாஎலிய வனப்பகுதியில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மஸ்கெலியா – ரிகாட்டன் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் இன்று (23) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதுஇ இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் கெசல்ஓயாவில் அனுமதியின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கைதானவர்கள் 30 முதல் 45 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இரத்தினக்கல் அகழ்விற்காகப் பயன்படுத்திய கருவிகளுடன் கைதான சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக பொகவந்தலாவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.