நுவரெலியா, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகல தோட்டத்தில், சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு இருந்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 23 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்வரும 13ஆம் திகதி நிதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.