சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது

0
123

நுவரெலியா மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓல்ட்டன் பிரதேசத்தில், சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த 38 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது மாணிக்கக்கல் அகழ்வுக்காக பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றிள்ளனர்.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.