மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணைபிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்குடாவெளி சின்ன கொலனி பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500 மில்லி லீட்டர் நிறையுடைய 101 பியர் டின்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டகுற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பண்டாரதெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பெண் மற்றும் கைப்பற்றப்பட்ட மதுபான டின்கள் நீதிமன்ற மன்ற சட்ட நடவடிக்கைக்காக மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றில் ஒப்படைக்க படவுள்ளதாக குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்