சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

0
217
ஹட்டன் – நோர்வூட் – போற்றி தோட்டப்பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று காலை கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.பொகவந்தலாவையைச் சேர்ந்த 17, 20 மற்றும் 25 வயதான இளைஞர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர்கள் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.