இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் குசல் மெந்திஸ் தனது ஒன்பதாவது சதத்தை பதிவு செய்துள்ளார்.
அதன்படி, தற்போது வரை குசல் மெந்திஸ் 122 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறார்.
9 நான்கு ஓட்டங்கள் மற்றும் 6 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 426 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வரும் குசல் மெந்திஸ் 122 ஓட்டங்களையும், மதுஷ்க 177 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 115 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக 492 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.