சந்தேகநபரின் தொலைபேசியை விற்பனை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்!

0
78

அம்பாறை பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரினுடைய கையடக்க தொலைபேசியை விற்பனை செய்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் 58,000 ரூபாய் பெறுமதியான தொலைபேசியை குறித்த காவல்துறை உத்தியோகத்தர் 5,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.