யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர் சிவநாதன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
பஞ்ச புராண ஓதுதலுடன் ஆரம்பான நிகழ்வில் முருகப்பெருமான் புகழ்பாடும் பண்ணிசைக் கச்சேரி இடம் பெற்றது
இதேவேளை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான சாந்தை, பண்டத்தரிப்பை சேர்ந்த மாணவிக்கு 1 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிக்கணினி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.