சபுகஸ்கந்தவில் எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் மீள ஆரம்பம்!

0
167

சுமார் 2 மாதங்களின் பின்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு இலட்சம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் வழங்கப்பட்டுள்ளதாக, அவர் தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். அத்துடன் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் அடங்கிய இரண்டாவது கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும். குறித்த இரண்டு கப்பல்களில் கொண்டு வரப்பட்ட இந்த மசகு எண்ணெய்யின் ஊடாக, எதிர்வரும் 40 நாட்களுக்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினை இயக்க முடியும். இதேவேளை, ஜெட் எரிபொருள் நேற்றிரவு முதல் தரையிறக்கப்படுவதாகவும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.