சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் : கைதானவர்கள் பிணையில் விடுதலை

0
135

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரையும் இரண்டு மாணவர்களையும் தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பதின்மூன்று மாணவர்களுக்கும் பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

கடந்த 09 ஆம் திகதி இரவு சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் மாணவி ஒருவரும் இரண்டு மாணவர்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 12ஆம் திகதி ஏழு மாணவர்களும் 14ஆம் திகதி மேலும் 6 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.