ஜனாதிபதி தேர்தலில் சமஷ்டி கோரிக்கையை முன்வைக்கும் வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா இவ்வாறு தெரிவித்தார்.