பொல்லு தாக்குதலுக்கு இலக்கான நிலையில், சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் இன்று (7) பகல் கொலன்ன ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாத பெண்ணொருவரே சமுர்த்தி உத்தியோகத்தரை பொல்லினால் தாக்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கொலன்ன பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கெம்பனே பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தரான சுஹாஷ் பிரசன்ன என்பவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கிவிட்டு மோட்டார் சைக்கிளிலில் திரும்பும்போதே சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.