மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் வறிய மாணவர்களின் கல்வியை மேம் படுத்தும் முகமாக சமுர்த்தி சிசு பல -2023 ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சி திட்டத்திற்கமைய வறியமாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இவ் விசேட நிகழ்வானது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசமில் தலைமையில் மாவடிச்சேனை அல் இக்பால் பாடசாலையில் நடைபெற்றது.
பிரதேச செயலக நிர்வாகத்தில் உள்ள 118 சமுர்த்தி சமூதாய அமைப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 450 மாணவர்களுக்கு 2ஆயிரம் ரூபா பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எஸ்.புவநேந்திரன் பிரதம அதிதியாக கலநது கொண்டார்.
உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமிசா மாவட்ட கணக்காளர் எம்.எஸ்.பசிர்,மாவட்ட சமூக அபிவிருத்தி முகாமையாளர் என்.புவிதரன் ஆகியோர்கள் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்;.