அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக ஊழியர்கள் நலன்புரி அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு, நேற்று பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் முகம்மது ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டக்ளஸ் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஆதம்பாவா, திட்டமிடல் பணிப்பாளர் அனீஸ், முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் மோகனகுமார், முன்னாள் மாவட்ட பொறியியலாளர் ராஸிக், பொத்துவில் பிரதேச செயலாளர் பிர்னாஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அஹமட் ஸாபீர், இறக்காமம் பிரதேச செயலாளர் றஸான், சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் முகம்மது கபீர், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆஸாத், நீர்ப்பாசன பொறியியலாளர் நவாஸ், அம்பாறை மாவட்ட செயலக தலைமை காணி உத்தியோகத்தர் முஸம்மில் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
கௌரவ அதிதிகளாக கணக்காளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், மேலதிக மாவட்ட பதிவாளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், நிர்வாக உத்தியோகத்தர்;, கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், அரசாங்க அதிபருக்குப் பொன்னாடை அனிவித்து நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், ஓய்வுபெற்ற முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் மோகனகுமார், முன்னாள் மாவட்ட பொறியியலாளர் ராஸிக் ஆகியோருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கிளைத் தலைவர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்த குறித்த நிகழ்வில், உத்தியோகத்தர்களிடையே விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.