சம்மாந்துறை பிரதேச செயலக நிதிப்பிரிவில் இன்று பகல் திடீரென தீப்பற்றி கொண்டதனால் ஆவணங்கள் பல தீக்கிரையாகியுள்ளன.
தீ விபத்தினை கல்முனை மாநகர தீயணைப்பு படை,
மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை என்பன துரிதகதியில் செயற்ப்பட்டு தீயை கட்டுப்படுத்தினர்.
மின்குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சம்மாந்துறை பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.