சம்மாந்துறை மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன

0
193

அம்பாறை சம்மாந்துறை கல்வி வலயத்தில், பின்தங்கிய நிலையில் உள்ள மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா விததி;யாலயத்தில் கல்வி கற்று, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மூன்று மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.


அசிஸ் ஆர்.ஆர் அமைப்பின் பிரதிநிதிகளான பொறியியலாளர் ஹென்றி அமல்ராஜ், கலாநிதி வி. சர்வேஸ்வரன் ஆகியோர் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தனர்.


துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ் கிருபைராஜா தலைமையில் நடைபெற்றது.


பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டொக்டர் உமர் மௌலானா கலந்து கொண்டார். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியை விஜயலதா இராமச்சந்திரனும் நிகழ்வில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.