இலங்கை புகையிலை நிறுவனமானது கடந்த வருடத்தின் நான்காவது காலாண்டில் வருவாய் மற்றும் இலாபத்தில் சரிவை சந்தித்துள்ளது.
குறைந்த விலையில் கடத்தப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளின் அதிகரிப்பு இந்த பலவீனமான செயல்திறனுக்குக் காரணம் என அந்த நிறுவனத்தில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் இலங்கை புகையிலை நிறுவனம் 55.96 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளது.
இது முந்தைய வருடத்தின் நான்காம் காலாண்டில் ஈட்டிய வருமானத்தை விடவும் சுமார் 4.5 சதவீதம் குறைவு என இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.