சர்வதேசத்தை புரிந்துகொள்ளுங்கள்

0
97

இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசபையால் – ஐக்கிய நாடு கள் சபையின் பொருளாதார மற்றும் சமூக பேரவையின் நிறைவேற்று குழுவுக்கு தெரிவாகியுள்ளது. இதனடிப்படையில் 2025ஆம் ஆண்டிலிருந்து மூன்று வருட காலத்துக்கு இந்தப் பொறுப்பில் இருக்கும். 189 நாடு கள் வாக்களிப்பில் கலந்து கொண்டன.

இதன்போது 182 வாக்குகளை பெற்று இலங்கை தெரிவாகியிருக்கின்றது. வாக்களிப்பின்படி ஆசிய பிராந்தியத்தில் இரண்டாவது இடத்தையும் உலகில் ஏழாவது இடத்தையும் இலங்கை பெற்றிருக்கின்றது. இலங்கை அரசை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தும் இராஜதந்திர நடவடிக்கையில் புலம்பெயர் சமூகம் ஈடுபட்டு வருவதான கதைகள் கூறப்பட்டுவரும் நிலையில்தான் இலங்கை இந்தளவு ஆதரவுடன் வெற்றிபெற்றிருக்கின்றது.

இலங்கைக்கு எதிராகக் கடந்த பதினைந்து வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட ‘தமிழ் லொபி’ ஒரு சிறிய அசைவைக்கூட ஏற்படுத்தவில்லை என்பதைத்தான் இந்த விடயம் அம்பலப்படுத்துகின்றது. ‘ஈழநாடு’ சர்வதேச அரசியலை புரிந்து கொள்வதிலுள்ள தமிழ் பல வீனங்கள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றது. இதேவேளை சர்வதேச அரசியலை உணர்வின் வழியாக நோக்குவதிலுள்ள ஆபத்துகளையும் ‘ஈழநாடு’ அவ்வப்போது சுட்டிக்காட்டியிருக்கின்றது.


ஆனால் இவை எவற்றையும் அரசியல்வாதிகளும் சரி அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக தங்களை காண்பித்துக் கொள்வோரும் சரி – கவனத்துடன் பரிசீலிக்கவில்லை. விடயங்களை அறிவுபூர்வமாக நோக்குவதற்கு பதிலாக போலியான நம்பிக்கைகளை பரப்பும் வகையிலேயே தங்களின் அபிப்பிராயங்களை முன்வைத்தனர். இப்போதும்கூட அவ்வாறான கதைகளையே பரப்ப முற்படுகின்றனர். தமிழ் அரசியல் பரப்பரையின் தோல்வியை கண்கூடாக நோக்கும்போதுகூட தங்களின் தோல்வியை உணர முடியாதவர்களாகவே தமிழ் அரசியல் தரப்புகள் இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி சில பிரேரணைகள் வந்தபோதிலும்கூட அவற்றால் இலங்கை அதன் சர்வதேச முகத்தை இழக்கவில்லை. சீன சார்பு ராஜபக்ஷக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இலங்கைத்தீவு இருந்தபோது இலங்கைமீதான மேற்குலகின் பார்வை சற்று காட்டமாகவே இருந்தது. மேற்குலகம் இலங்கைமீது கடுமையான அழுத்தங்களை பிரயோகிப்பதாகவே தமிழ் தரப்புகளும் எண்ணிக்கொண்டன.


ஆனால் ராஜபக்ஷக்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் நிலைமைகள் சடுதியாக மாற்றமடைந்தன. இதன் உண்மை தன்மையை தமிழ் அரசியல் சமூகம் சரியாக புரிந்துகொள்ளவில்லை. இலங்கைமீதான அழுத்தங்கள் அடிப்படையில் தமிழ் மக்களின் நலனிலிருந்து மேற்கொள்ளப்பட்டவை அல்ல. வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது ஒப்பீட்டடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்கள்மீது கரிசனையுடன் இருக்கலாம். ஆனால்இ அதனால் இலங்கைமீது நிர்ப்பந்தங் களை ஏற்படுத்த முடியாது.


அடிப்படையில் சர்வதேச அழுத்தங்கள் என்பவை பலம் பொருந்திய நாடுகளின் நிகழ்ச்சிநிரல்களுக்கு உட்பட்டவை. இதனை புரிந்து கொண்டால் மட்டும்தான் சர்வதேசம் என்னும் சொல்லை புரிந்துகொள்ள முடியும். அவ்வாறில்லாது போனால் வெறுமனே சில சொற்களை உச்சரித்துக்கொண்டு திருப்திப்பட்டுக் கொள்வதுதான் தமிழ் மக்களுக்கான அரசியலாக எஞ்சப்போகின்றது. கனடாஇ ராஜபக்ஷக்கள்மீது தடை விதித் தமைக்கு தாங்களே காரணமென்று புலம்பெயர் சமூகத்தின் ஒரு பகுதி யினர் கூறிக்கொண்டனர். அவ்வாறாயின்இ இப்போதுஇ ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக பேரவையின் நிறைவேற்று குழு வுக்கு 182 நாடுகளின் ஆதரவுடன் இலங்கை தெரிவு செய்யப்பட்டிருப்பதை எவ்வாறு நோக்குவது?