சர்வதேச சட்டத்தை கடைபிடித்து அமைதியை பேண வலியுறுத்து!

0
6

நாட்டின் இறையாண்மையை ஏற்றுக்கொள்வதோடு சர்வதேச சட்டத்தைக் கடைபிடித்து கிழக்கு கடலில் அமைதி, ஸ்தீரத்தன்மையைப் பேணுமாறு வியட்நாமின் வௌிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

தென் சீனக்கடலிலுள்ள சர்ச்சைக்குரிய சண்டி கே மணல் திட்டில் சீனாவும் பிலிப்பைன்ஸும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தங்கள், தங்கள் கொடிகளை ஏற்றும் நிகழ்வுகளை நடத்தியுள்ளன. அதனை தொடர்ந்து இரு நாடுகளும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தங்கள், தங்கள் கரையோரக் காவல்படையினரை குறித்த மணல் திட்டுக்களுக்கு அனுப்பியுள்ளன.

ஆனால் இந்த மணல் திட்டுக்களை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகக் கருதி வரும் வியட்நாம் இக்கொடியேற்ற நிகழ்வுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் வியட்நாம் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பாம் து ஹாங் கூறுகையில், வியட்நாமின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளவும், சர்வதேச சட்டத்தை கடைபிடிக்கவும், கிழக்கு கடலில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணவும் சம்பந்தப்பட்ட தரப்பினரை நாம் வலியுறுத்துகிறோம்’ என்றுள்ளார்.

தமது கடல்சார் உரிமைகோரல்கள் தொடர்பான சட்ட நிலைப்பாட்டை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை வியட்நாம் முன்னெடுத்துவரும் சூழலில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.