சர்வதேச லயன்ஸ் கழகத்தின் ஆதரவிற்கு ஜனாதிபதி பாராட்டு

0
116

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் பிரையன் எட்வர்ட் ஷீஹானுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதன்போது, சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுக்கவும், இளைஞர் மத்தியில் தீங்கு விளைவிக்கும் மதுபான பாவனையை குறைக்கவும் லயன்ஸ் கழகம் இளைஞர்களின் பங்களிப்புடன் நடத்தியுள்ள போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் லயன்ஸ் ஆய்வு நிகழ்ச்சித்திட்டம் ஆகியவற்றிற்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதற்கும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு லயன்ஸ் கழகத்தின் முன்னாள் சர்வதேச தலைவர் மகேந்திர அமரசூரியவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். கடந்த 33 வருடங்களாக லியோஸ் அண்ட் லயன்ஸ் கழகத்தில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதிக்கு, சர்வதேச லயன்ஸ் கிளப் தலைவர் நினைவுச் சின்னமொன்றையும் சந்திப்போது வழங்கி வைத்தார். லயன் லோரி மேரி ஷீஹான் , லயன் மகேந்திர அமரசூரிய, லயன் மகேஷ் பெஸ்குவல், லயன் சுனில் வட்டவல, லயன் அனுர விக்ரமநாயக்க மற்றும் லயன் லசந்த குணவர்தன ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.