சர்வதேச வாய் சுகாதார தினத்தையொட்டி, அம்பாறை கல்முனையில், பற்சிகிச்சை முகாம்

0
88

சர்வதேச வாய் சுகாதார தினத்தையொட்டி அம்பாறை கல்முனை பிராந்திய வாய் சுகாதார பிரிவு ஏற்பாடு செய்த மாபெரும் பற்சிகிச்சை முகாம் இன்று அக்கரைப்பற்று, கண்ணகிபுரம்
கண்ணகி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
‘மகிழ்ச்சியான வாய் ஆரோக்கியமான உடல்’ எனும் தொனிப்பொருளில் பிராந்திய வாய் சுகாதார பிரிவு ஏற்பாடு செய்த நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
டொக்டர் திருமதி சகீலா சஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.பபாகரன், கல்முனை பிராந்திய தாய்சேய் நலன்பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.எச்.றிஸ்பின், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி பீ.அகிலன், பிராந்திய வாய் சுகாதார பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.சஷரூக், கண்ணகி மகா வித்தியாலய அதிபர் ரீ.ராசநாதன் மற்றும் பல் மருத்துவர்கள், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
மாணவர்களுக்கு பல் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் ,டம்பெற்றது.
பிராந்திய வாய் சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.சஷரூக், டொக்டர் ஹபீல் ஆகியோர் வாய் சுகாதாரம் தொடர்பான கருத்தரங்கில்
விரிவுரையாற்றினர்.