சர்வதேச விசாரணைக்கு முன்பாக சாட்சியமளிக்க தயார் – மௌலானா

0
145

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முன்பாக சாட்சியமளிக்க தாம் தயார் என தகவலாளர் ஆசாத் மௌலானா அறிவித்துள்ளார்

ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்ட மௌலானா, சுயாதீன விசாரணை ஒன்றில் தாம் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்

பிரித்தானிய செனல் 4 தொலைகாட்சி மூலம் செப்டம்பர் 5 ஆம் திகதி ஒளிபரப்பப்பட்ட “இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள்” என்ற ஆவணப்படம் இலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த ஆவணப்படம் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு ஆதரவை உருவாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

எனினும் நிறைய வதந்திகள் மற்றும் போலி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன் தமது மனைவி மற்றும் குழந்தைகளை கூட அவதூறு செய்து சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் மௌலானா தெரிவித்துள்ளார்

தாம் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் பணியாற்றிய போதும், தாம் ஆயுத பயிற்சி பெற்ற போராளி அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் தொடர்பான முக்கியமான மற்றும் இரகசியத் தகவல்கள் தமக்குக் கிடைத்தன” எனவும் அவர் கூறியுள்ளார்.