சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த ட்ராகன் விண்கலம்!

0
5
NASA 3502549

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் ட்ராகன் விண்கலம் இணையும் காணொளியை பிரபல கோடீஸ்வர வரத்தகர் ஈலோன் மஸ்க் தம்முடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் நாசா அமைப்பும் இணைந்து விண்கலம் ஒன்றை அனுப்பியது.

நேற்றிரவு 11.30 ற்கு இந்த விண்கலம் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இன்று காலை 9.40ற்கு இந்த விண்கலம் சென்றடைந்துள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி இந்த விண்கலத்தின் ஊடாக இருவரும் பூமிக்குத் திரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.